தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இசை கல்லுாரி புதுப்பிக்கும் பணி

இசை கல்லுாரி புதுப்பிக்கும் பணி

இசை கல்லுாரி புதுப்பிக்கும் பணி


UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM

ADDED : ஜூலை 02, 2023 04:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 02, 2023 12:00 AM ADDED : ஜூலை 02, 2023 04:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
227 ஆண்டு இசை கல்லுாரி கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லுாரி நிர்வாக அலுவலக கட்டடம் இந்தோ - சராசனிக் கட்டட கலையில் 1904ல் கட்டப்பட்டது. இரண்டு தளங்களை உடைய இந்த பாரம்பரிய கட்டடம், 28,051 சதுரஅடி பரப்பளவு கொண்டது. இந்த கட்டடத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணி, தற்போது துவங்கியுள்ளது. இதற்கு 4.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இதேபோல சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள அரசு இசை கல்லுாரி தென்றல் கட்டடம், பழமை மாறாமல் புனரமைக்கப்படவுள்ளது. இது 1796ல் கட்டப்பட்டு, 227 ஆண்டுகள் ஆகிறது. இந்த கட்டடம் மொத்தம் 20,465 சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் புனரமைப்பு பணிக்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. இரண்டு கட்டடங்களின் புனரமைப்பு பணிகளையும் 18 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப்பணித் துறை ஒப்பந்த நிறுவனங்கள் வாயிலாக இப்பணி மேற்கொள்ளப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us