தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை

டி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை

டி.இ.ஓ.,க்கள் நியமனத்தில் விதிமீறல் இல்லை


UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM

ADDED : ஜூலை 04, 2023 09:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 04, 2023 12:00 AM ADDED : ஜூலை 04, 2023 09:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
தமிழகத்தில் மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலிப்பணியிடங்களில் பொறுப்பு டி.இ.ஓ.,க்கள் நியமித்ததில் கல்வி இயக்குனர் விதி மீறவில்லை, என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து இச்சங்க மாநில தலைவர் அன்பரசன், செயலாளர் மாரிமுத்து கூறியுள்ளதாவது: 
ஜூன் 30ல் ஓய்வு பெற்ற டி.இ.ஓ.,க்களில் காலியாக உள்ள ஐந்து இடங்களை நான்கு உயர்நிலை தலைமையாசிரியர், ஒரு மேல்நிலை தலைமையாசிரியருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறி கல்வி இயக்குனர் நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இதில் எந்த விதிமீறலும் இல்லை. 1978 முதல் 1997 வரை டி.இ.ஓ., நியமனத்தில் நேரடியாக 20 சதவீதம், உதவிபெறும் உயர்நிலை பள்ளிகளில் இருந்து 5 சதவீதம், உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் 75 சதவீதம் என்ற அடிப்படையில் நிரப்பப்பட்டது.பின் இந்த 75 சதவீதத்தில் மாற்றம் செய்து உயர்நிலை தலைமையாசியர் 50 சதவீதம், மேல்நிலை தலைமையாசிரியருக்கு 25 சதவீதம் என்ற நிலையில் பதவி உயர்வு வழங்கப்பட்டது. இதையடுத்து மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கோரிக்கை அடிப்படையில் 2009ல் மீண்டும் இந்த விகிதத்தில் மாற்றம் செய்து, உயர்நிலைக்கு 40 சதவீதம், மேல்நிலைக்கு 35 சதவீதம் என தற்போது வரை நடைமுறையில் உள்ளது. இதன்படியே டி.இ.ஓ., காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டன.இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us