UPDATED : ஜூலை 07, 2023 12:00 AM
ADDED : ஜூலை 07, 2023 10:33 AM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றதால் அவருக்கு பதில் நிர்வாக பணிகளை கவனிக்க கன்வீனர் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.பல்கலையில் பதிவாளர் உட்பட அனைத்து உயர் பதவிகளிலும் பேராசிரியர்களே கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். இந்நிலையில் துணைவேந்தர் ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் சென்றுள்ளார். துணைவேந்தர் இல்லாத நிலையில் நிர்வாகத்தை வழிநடத்த பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் வாசுதேவன், புஷ்பராஜ், நாகரத்தினம், உயர்கல்வி செயலாளர் கார்த்திக், சட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் கொண்ட கன்வீனர் கமிட்டியை அமைத்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
