UPDATED : ஜூலை 08, 2023 12:00 AM
ADDED : ஜூலை 08, 2023 09:11 AM
அ நிறம் | அளவு
கோவை:
கேரளாவில் நடந்த சர்வதேச ஓபன் செஸ் போட்டியில், கோவையை சேர்ந்த பள்ளி மாணவர் மூன்றாமிடம் பிடித்தார்.செஸ் பிஷப் அமைப்பு சார்பில், &'தோனி டிராபி&' என்ற பெயரில், முதலாம் ஆண்டு சர்வதேச அளவிலான ஓபன் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள், கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள எல்.இ.ஏ.டி., கல்லுாரியில் நடத்தது. ஒன்பது சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், பல்வேறு பகுதிகளில் இருந்து, 400க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். கோவை எஸ்.இ.எஸ்., மெட்ரிக் பள்ளியில், எட்டாம் வகுப்பு படிக்கும் ஆகாஷ் பங்கேற்று, ஒன்பது சுற்றுகளில், 7.5 புள்ளிகள் எடுத்து, மூன்றாம் இடம் பிடித்தார்.
