தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி

முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி

முதல்வர் கோப்பை நீச்சல் போட்டி


UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM

ADDED : ஜூலை 12, 2023 05:43 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 12, 2023 12:00 AM ADDED : ஜூலை 12, 2023 05:43 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழக முதல்வர் கோப்பை நீச்சல் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் பதக்கங்களும் பரிசுத் தொகையும் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியருக்கான முதல்வர் கோப்பை மாநில நீச்சல் போட்டிகள், ஐந்து பிரிவுகளில் சென்னை, வேளச்சேரி நீச்சல் குள வளாகத்தில், கடந்த 7ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடந்தன. பள்ளி பிரிவில் 380, கல்லுாரி பிரிவில் 330 பேர் என, மொத்தம் 710 பேர் பங்கேற்றனர். ஆண்கள் பிரிவில் கல்லுாரி பிரிவிலான போட்டிகளில் செங்கல்பட்டு பெனடிக்சன் ரோகித் மற்றும் விகாஸ், திருநெல்வேலி லியோனார்டு, சென்னை டெரல்ஸ்டீவ், அகமத் ஹர்சாக், சாய்கணேஷ் மற்றும் சத்திய சாய் கிருஷ்ணன், காஞ்சிபுரம் பென்ஹெனன் மற்றும் தனுஷ், திருவள்ளூர் யதேஷ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.கல்லுாரி மாணவியருக்கான போட்டிகளில் சென்னை வர்ஷா மற்றும் பிரியங்கா, செங்கல்பட்டு ரக்சனா, கோயம்புத்துார் ஸ்ரீநிதி மற்றும் அபிஷா ஏஞ்சலின், தஞ்சாவூர் ஜாஸ்ரீ, திருநெல்வேலி செல்வரேவதி, கடலுார் ரக்சனா ஆகியோர் வெற்றி பெற்றனர். பள்ளி மாணவர்களுக்கான போட்டிகளில் திருநெல்வேலி ஜாஷுவா தாமஸ், பிரவீன் குமார், மதுரை குணபாலன், செங்கல்பட்டு விஷால் மற்றும் தர்ஷன், சென்னை ஹிதேஷ் பப்னா, கிஷன் மற்றும் ஸ்ரீராம், கடலுார் அலோசியஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர்.மாணவியரில் சென்னை தீக்ஷா சிவகுமார், பிரமதி ஞானசேகரன் மற்றும் ஸ்ரீநிதி நடேசன், கோயம்புத்துார் அத்விகா நாயர் மற்றும் அக்ஷயா, திருநெல்வேலி பாலபொன்னி, ஜாய் ஸ்ரீ மற்றும் மரியா வின்சியா, செங்கல்பட்டு மகாலட்சுமி, மதுரை ரோஷினி, திருச்சி தனுஜா ஆகியோர் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றனர். அனைத்து பிரிவு போட்டிகளிலும் முதலிடம் பெற்ற வீரர், வீராங்கனையருக்கு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, 1 லட்சம் ரூபாய், இரண்டாம் இடம் பெற்றவர்களுக்கு 75,000 ரூபாய், மூன்றாம் இடம் பெற்றோருக்கு, 50,000 ரூபாய்க்கான காசோலையையும், பதக்கங்களையும் வழங்கி, கவுரவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us