தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுடில்லியை சுற்றிப்பார்த்த அட்டப்பாடி மாணவர்கள்

புதுடில்லியை சுற்றிப்பார்த்த அட்டப்பாடி மாணவர்கள்

புதுடில்லியை சுற்றிப்பார்த்த அட்டப்பாடி மாணவர்கள்


UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM

ADDED : ஜூலை 14, 2023 08:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM ADDED : ஜூலை 14, 2023 08:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு:
கேரள மாநிலம், பாலக்காடு, அட்டப்பாடி மாணவர்கள், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக புதுடில்லி சென்று திரும்பியுள்ளனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது அட்டப்பாடி. மாநிலத்தில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் இங்கு வசிக்கின்றனர். அட்டப்பாடி குடியிருப்பு பகுதிகளில் தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் எழுத்தறிவு கழகம் மற்றும் மாணவர் போலீஸ் தலைமையில், பாலக்காடு எம்.பி., ஸ்ரீகண்டனின் நிதி உதவியால், மாணவர்கள் புதுடில்லி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். அட்டப்பாடியிலுள்ள, அகழி தொழிற்கல்வி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10 பேர் கொண்ட குழு, கடந்த 6ம் தேதி புதுடில்லி சென்றது. பழைய பாராளுமன்றம், ஜனாதிபதி பவன், வீர்பூமி, இந்தியா கேட் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டனர். புதுடில்லி பெருமை மற்றும் நிர்வாக மையங்களை கண்டறிந்து திரும்பி வந்துள்ளனர்.இதுகுறித்து மாணவர்கள் கூறியதாவது:
நான்கு நாள் டில்லி பயணத்தில் தெரிந்து கொண்ட தகவல்கள் குறித்து, மக்களிடமும் தெரிவிப்போம். நாட்டின் நிர்வாக அமைப்புகள் மற்றும் நிறுவனங்கள் குறித்து நன்றாக அறிந்து கொண்டோம்.எங்களில் சிலர் கேரளாவுக்கு வெளியே சென்றதே இல்லை. சிலர் ரயிலில் பயணித்தது கிடையாது. பிளஸ் 2 மாணவர்களான எங்களுடன் ஆறு ஆசிரியர்களும் வந்தனர். அவர்களின் வழிகாட்டுதலில் பல விஷயங்களை தெரிந்து கொண்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us