தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘சிறிய லட்சியம் ஒரு குற்றம்’

‘சிறிய லட்சியம் ஒரு குற்றம்’

‘சிறிய லட்சியம் ஒரு குற்றம்’


UPDATED : ஜன 08, 2010 12:00 AM

ADDED : ஜன 08, 2010 10:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2010 12:00 AM ADDED : ஜன 08, 2010 10:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சமீபத்தில் சென்னை ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியின் 75 வது ஆண்டு விழாவிற்கு வருகைபுரிந்த கலாம், வழக்கம்போல் பள்ளி மாணவ, மாணவியரிடம் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:


மாணவ, மாணவியர் ஒவ்வொரு வரும் தனது வீட்டில் 20 சிறந்த புத்தகங்கள் கொண்ட ஒரு சிறிய நூலகத்தை ஏற்படுத்த வேண்டும். அதனை 200 புத்தகங்களாக மேம்படுத்த பெற்றோரும், ஆசிரியர்களும் ஊக்குவிக்க வேண்டும். இந்த நூலகத்தில் தினமும் குறைந்தது ஒரு மணிநேரமாவது மாணவ, மாணவியர் பயன்படுத்த வேண்டும். உலக அமைதி ஒவ்வொருவரது அறிவில் இருந்து துவங்குகிறது. சிறந்த அறிவுடையவர்கள் ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுவர். இது அவர்களது எண்ணத்தை தூய்மையாக்கும். அழகிய குணநலன்களை பெறுவர். இது நல்லிணக்கத்திற்கும், உலக அமைத்திக்கும் வித்திடும். இதற்கு பெற்றோரும் ஆன்மிக சூழலை உருவாக்க வேண்டும்.


ஒவ்வொரின் குறிக்கோளும் உயர்வானதாக இருக்க வேண்டும். ‘சிறிய லட்சியம் ஒரு குற்றம்’ என்று எண்ண வேண்டும். இதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டை கூற விரும்புகிறேன். நான் ஜனாதிபதியாக இருந்தபோது ஒரு விழாவில், தமிழகத்தைச் சேர்ந்த கண் பார்வை குறைப்பாடுள்ள ஸ்ரீகாந்த என்ற மாணவனிடம் உனது குறிக்கோள் என்ன, என்று கேட்டேன். அதற்கு அம்மாணவன் ‘நான் இந்தியாவின் பார்வை குறைப்பாடுடைய முதல் ஜனாதிபதி ஆக வேண்டும்’ என்றான். இவ்வாறு அனைவரும் தனது லட்சியத்தை உயர்வானதாக கொண்டு, அதற்கு தேவையான செயல்களில் ஆர்வமாக ஈடுபட வேண்டும்.


‘எவ்ரிடே கிரேட்னஸ்’ என்ற புத்தகம் ஒவ்வொரும் படிக்க வேண்டிய புத்தகம். நீங்கள் எந்த துறையில் இருந்தாலும் தலைமைப் பண்புடன் செயல்பட வேண்டும்.


உலகில் கார்பன் அளவு அதிகரித்து வருவதால், புவி வெப்பமயமாகிறது. இதனை தடுக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை. இவ்வுலகில் 600 கோடி பேர் உள்ளனர். ஒவ்வொரு வரும் அடுத்த மூன்று ஆண்டுகளில் தலா மூன்று மரக்கன்றுகளை நட்டு, பாதுகாத்தால் புவி வெப்பத்தை குறைக்கலாம். இதனை உறுதிமொழியாக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும். இவ்வாறு கலாம் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us