UPDATED : ஜூலை 14, 2023 12:00 AM
ADDED : ஜூலை 14, 2023 10:01 AM
பெரும்பாக்கம் அரசு தொழிற்பயிற்சி நிலையம், 2019ல் துவங்கப்பட்டது. இங்கு, எலக்ட்ரீசியன், வெல்டிங், ஏசி மெக்கானிக், கணினி மற்றும் இருசக்கர வாகனம் பழுது நீக்கம் ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.இந்நிலையில், 2023 -24ம் கல்வியாண்டில், புதிய தொழில்நுட்பம் 4.0 திட்டத்தில், பிராசஸ் கன்ட்ரோல் அண்டு ஆட்டோமேஷன், இன்டஸ்ட்டிரியல் ரோபோடிக்ஸ் டிஜிட்டல் மேனுபேக்சரிங் டெக்னீசியன், பேசிக் டிசைனர் மற்றும் சி.என்.சி., மிஷினிங் டெக்னீசியன் ஆகிய நான்கு பாடப்பிரிவுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இதற்காக, 34.73 கோடி ரூபாயில் கட்டடம் மற்றும் உயர் தொழில்நுட்ப மையம் கட்டப்பட்டது. நேற்று, இம்மையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சோழிங்கநல்லுார் எம்.எல்.ஏ., அரவிந்த் ரமேஷ் பேசியதாவது:
ஐ.டி., நிறுவனங்கள் அதிகமுள்ள சோழிங்கநல்லுாரில், 4.0 தொழில்நுட்பத்துடன், ஐ.டி.ஐ., திறக்கப்பட்டு உள்ளது. உதவித்தொகையுடன் இலவச படிப்பு வழங்குவதால், ஏழை, நடுத்தர மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். உடனடி வேலை வாய்ப்புக்கு ஏற்ற பாடப்பிரிவுகள் அதிகம் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
300 இருக்கைகள்
மொத்தம், 300 இருக்கைகள் உள்ளன. புதிய தொழில்நுட்பத்தில் படிக்க, மாணவர் சேர்க்கை நடக்கிறது. சீருடை, பாடப்புத்தகம், காலணி, சைக்கிள், வரைபட கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இலவச பேருந்து வசதி, மாதம் 750 ரூபாய் உதவித்தொகையுடன், படித்த பின், தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. சேர்க்கை தொடர்பான விபரங்களுக்கு, 99629 86696 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
