தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மைசூரில் சர்வதேச தொழில்நுட்ப அருங்காட்சியகம்

மைசூரில் சர்வதேச தொழில்நுட்ப அருங்காட்சியகம்

மைசூரில் சர்வதேச தொழில்நுட்ப அருங்காட்சியகம்


UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM

ADDED : ஜூலை 16, 2023 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 16, 2023 12:00 AM ADDED : ஜூலை 16, 2023 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மைசூரு:
கர்நாடகாவின் செழுமையான கலை, கலாசார பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில், புதிய தொழில்நுட்பத்துடன் மைசூரில் சர்வதேச தரம் வாய்ந்த கர்நாடக தொல்பொருள் அருங்காட்சியகம் மற்றும் கலைக்கூடம் கட்டப்படவுள்ளது.அரண்மனை நகரமான மைசூருக்கு தேசிய, சர்வதேச சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். ஏ.ஆர்., எனும், ஆக்மென்டட் ரியாலிட்டி மற்றும் வி.ஆர்., எனும் விர்ச்சுவல் ரியாலிட்டி மூலம், மாநிலத்தின் தொல்லியல், கட்டடக்கலை மதிப்புடன் கலை, கலாசார பாரம்பரியத்தை முறையாக காட்சிப்படுத்த பயன்படுத்தப்படும். நகரின் சாமுண்டி விஹார் ஸ்டேடியம் அருகே தொல்லியல், அருங்காட்சியகம் மற்றும் பாரம்பரிய துறை சார்பில் அரை ஏக்கர் நிலத்தில், விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பத்துடன் கலைக்கூடம் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதுவரை பெயருக்கு மட்டுமே தொல்பொருள் மற்றும் தொல்லியல் துறையாக இருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் துறை மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து எந்த தகவலும் இல்லை. இருப்பினும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட மானியங்கள் மற்றும் இதர வசதிகளுடன் கலைக்கூடம் முறையாக கட்டப்பட்டால், நகரம் மற்றொரு சுற்றுலா தலமாக மாறும் என்பதில் சந்தேகம் இல்லை.ஒவ்வொரு மாவட்டத்திலும் தொல்லியல் அருங்காட்சியகம் அமைப்பதே இத்துறையின் நோக்கமாகும். ஆனால், இதுவரை மாநிலத்தில், 16 அருங்காட்சியகங்கள் மட்டுமே இருந்தன. அவையும் பெயரளவில் மட்டுமே உள்ளன. இப்போது படிப்படியாக கவர்ச்சிகரமான முறையில் மேம்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அரசு அறிவித்துள்ளது. தொல்லியல் துறை மற்றும் அரசின் அலட்சியத்தால், கி.பி., 8ம் நுாற்றாண்டு முதல் 17ம் நுாற்றாண்டு வரையிலான நுாற்றுக்கணக்கான பொருட்கள், பொது மக்கள் பார்வைக்கு வைக்க படாமல், ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளன.முறையான நிர்வாகம், பலகை, விளம்பரம் இல்லாததால், சுற்றுலா பயணியர், வரலாற்று ஆசிரியர்கள் இடம் இருந்து புகார்கள் வந்து உள்ளன. தொல்லியல் நிபுணர்கள் கூறுகையில், பழங்கால சிற்பங்கள், வேலையாட்கள் இல்லாமல் பராமரிப்பின்றி உள்ளன. கலை, இலக்கியம், இசை, கலாசாரம், கட்டடக்கலை, சிற்பக்கலை என, பழங்காலத்தில் இருந்தே புகழ் பெற்று விளங்கும் மைசூரு மாவட்டத்தில் இந்த அனைத்தும் உள்ளடக்கிய அருங்காட்சியகத்துக்கு தகுந்த கேலரி தேவை. ஹொய்சாளர், சோழர், சாளுக்கியர் காலத்திய தந்தம், தந்திர சிற்பங்கள், தனியாரின் வசம் உள்ள மர வேலைப்பாடுகள் உள்ளிட்ட பல ஓவியங்கள், மைசூரில் கலையரங்கம் கட்டிய பின், அவர்களும் துறையுடன் கைகோர்த்தால், மேலும் கவர்ச்சியாக இருக்கும். அவர்களின் கலை படைப்புகளை காட்சிப்படுத்த அனுமதி வழங்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us