UPDATED : ஜூலை 17, 2023 12:00 AM
ADDED : ஜூலை 17, 2023 10:12 AM
கலாசிபாளையம்:
கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் சார்பில், காமராஜர் பிறந்த நாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பெங்களூரு கலாசிபாளையம் நியூ எக்ஸ்டென்ஷனில் உள்ள கர்நாடக ஹிந்து நாடார் அசோசியேஷன் அலுவலகத்தில், காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில், சங்க உறுப்பினர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். பெங்களூரு தமிழ் சங்கம் நடத்தும் காமராஜர் உயர்நிலைப் பள்ளி மாணவ - மாணவியருக்கு, ஸ்கூல் பேக்கை, அசோசியேஷன் தலைவர் தியாகராஜன் வழங்கினார்.கர்நாடக கூடுதல் அட்வகேட் ஜெனரல் கெம்பண்ணா, பெங்களூரு தமிழ் சங்கத்தின் சம்பத், ராமசுப்பிரமணியம், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி மண்டல மேலாளர் வசந்தன், கிளை கூடுதல் பொது மேலாளர் மகேஷ், காமராஜ் என்கிளேவ் தலைவர் சுந்தரேசன், செயலர் சசிகாந்த், காமராஜர் பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரி உட்பட பலர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை துணைத் தலைவர் சுரேஷ் குமார், செயலர் கிருஷ்ணவேணி, பொருளாளர் ஜவஹர் உட்பட உறுப்பினர்கள் செய்திருந்தனர்.
