UPDATED : ஜன 08, 2010 12:00 AM
ADDED : ஜன 08, 2010 01:47 PM
அ நிறம் | அளவு
அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறைக்கு பின், ஜன., 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. ஜனவரியில் பொங்கல் விடுமுறை, வார விடுமுறை போக மீதம் 16 நாட்களே பள்ளி பணிநாட்களாக உள்ளன.
இதில் ஆசிரியர்களுக்கு 4, 5, 6, 7, 8, 11 ஆகிய தேதிகளில், மாற்றி அமைக்கப்பட்ட செயல்வழி கற்றல் திட்ட பயிற்சிகள் நடக்கின்றன. இந்த பயிற்சி முடிந்ததும் ஆசிரியர்கள், வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே இடைப்பட்ட ஓரிரு நாட்களில் மட்டுமே, பள்ளிகளில் வகுப்பு நடத்தும் வாய்ப்பு உள்ளது. தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு, ஜனவரி மாதம் விடுமுறை மாதம் போல் காணப்படுகிறது. மொத்தம் ஆண்டுக்கு 220 பள்ளி நாட்களே உள்ளன.
இதுவரை, 142 நாட்கள் பள்ளி நடந்துள்ளது. 35 நாட்கள், ஆசிரியர்கள், செயல் வழிக்கற்றல் பயிற்சிக்கு சென்று விட்டனர். 78 பள்ளி நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தொடர் பயிற்சிகள், பல்வேறு பணிகளால், ஆசிரியர்களால் பாடம் நடத்த முடியவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
