UPDATED : ஜூலை 21, 2023 12:00 AM
ADDED : ஜூலை 21, 2023 09:42 AM
அ நிறம் | அளவு
சென்னை:
சென்னை பல்கலையின் பட்டமளிப்பு விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.சென்னை பல்கலையின், 165வது பட்டமளிப்பு விழாவை ஆக.,6ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விழாவில், சென்னை பல்கலையின் இணைப்பில் இயங்கும், 200க்கும் மேற்பட்ட கல்லுாரிகளின் மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர். இந்த விழாவில், சிறப்பு விருந்தினராக பங்கேற்க வருமாறு, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு, பல்கலையில் இருந்து கவர்னர் ரவி வழியாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவரது வருகை உறுதியானதும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
