தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏஐ தொழில்நுட்பத்தில் படங்கள்: ஹம்பி

ஏஐ தொழில்நுட்பத்தில் படங்கள்: ஹம்பி

ஏஐ தொழில்நுட்பத்தில் படங்கள்: ஹம்பி


UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM

ADDED : ஜூலை 24, 2023 08:35 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM ADDED : ஜூலை 24, 2023 08:35 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விஜயநகரா:
ஹம்பியில், செயற்கை நுண்ணறிவு வாயிலாக உருவாக்கப்பட்ட படங்கள், சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்ந்ததுடன், இங்கு வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.விஜயநகரா மாவட்டம், ஹம்பியில் கடந்த 9 முதல் 12ம் தேதி வரை ஜி - 20 கலாசார பணிக்குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் பங்கேற்க வந்த, உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளை கவர, உலக பாரம்பரிய சின்னமான ஹம்பியில் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதில், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவு வாயிலாக, விஜயநகர சாம்ராஜ்யத்தில், ஹம்பி எப்படி இருந்தது என்பதை விளக்கும் படங்கள் இடம் பெற்றிருந்தன. இங்குள்ள பழைய மார்க்கெட், கடைகளில் பொருட்கள் வாங்குவது, குதிரைகள், யானைகள், பிற விலங்குகள் என அழகாக வரையப்பட்டிருந்தன. அரச குடும்பத்தினரின் காட்சி அமைப்புகள், பலரது கவனத்தையும் ஈர்த்தது. இந்த படங்களை மத்திய அரசு அதிகாரிகள், சமூக வலைதளங்களில் பகிர்ந்து இருந்தனர். இதனால் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இது குறித்து, இங்கு வழிகாட்டியாக உள்ள நாகராஜ் கூறியதாவது:
கர்நாடகாவின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஹம்பியும் ஒன்றாகும். இங்கு உள்ள நினைவு சின்னங்கள், கோவில்கள், பிற பாரம்பரிய இடங்களின் படங்கள், சுற்றுலா பயணியரின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுத்துள்ளது. திருமணத்துக்கு முந்தைய பிரீ போட்டோ ஷூட் படப்பிடிப்புகள் இன்று பிரபலமாகி வருகின்றன. இருப்பினும் இங்கு புகைப்படம், திரைப்படங்களின் படப்பிடிப்புகளுக்கு உள்ளூர் அதிகாரிகளின் அனுமதி தேவை. மொபைல் போனில் படம் எடுப்பதற்கு எந்த தடையும் இல்லை.இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us