UPDATED : ஜூலை 24, 2023 12:00 AM
ADDED : ஜூலை 24, 2023 09:04 AM
அ நிறம் | அளவு
அடையாறு:
அடையாறு மண்டலத்தில் உள்ள 13 வார்டுகளில், 24 மாநகராட்சி பள்ளிகள் மற்றும் நான்கு அரசு பள்ளிகள் உள்ளன.இங்குள்ள வகுப்பறை, கழிப்பறை சுத்தம் செய்ய, தற்காலிக ஊழியர்கள் நியமிக்க மாநகராட்சி முடிவு செய்தது. இதன்படி, தேசிய நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வாயிலாக, 95 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு, மே மாதம் நீங்கலாக, 11 மாதங்கள் பணி வழங்கவும், தினமும் 522 ரூபாய் ஊதியம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 1.55 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.
