UPDATED : ஜூலை 26, 2023 12:00 AM
ADDED : ஜூலை 26, 2023 09:07 AM
புதுச்சேரி:
நீர் மற்றும் கழிவுநீரை துாய்மைப்படுத்துவதில் அதிநவீன தொழில்நுட்பங்கள்&' என்ற தலைப்பிலான ஒரு நாள் பயிலரங்கம், புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்தது.சிவில் இன்ஜினியரிங் மற்றும் கெமிக்கல் இன்ஜினியரிங் துறையும், லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவன கட்டுமான பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த பயிலரங்கத்தை, தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் துவக்கி வைத்தார். லார்சன் அண்ட் டியூப்ரோ நிறுவன கட்டுமான பிரிவு துணைத் தலைவரும், தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான ஜெகநாதன் சிறப்புரையாற்றினார். பேராசிரியர் சாமுவேல் ராஜ்குமார் வாழ்த்தி பேசினார்.கழிவுநீரை பொருளாதார அடிப்படையிலும், சூழலியல் அடிப்படையிலும் திறம்பட நிர்வகிக்கும் குறிக்கோளுடன் நவீன தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்துவது, நீர் மேலாண்மை துறையில் மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள ஊக்குவிப்பது என பயிலரங்கத்தில் வலியுறுத்தப்பட்டது. விழாவில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
