தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இக்னோ பல்கலையில் தமிழில் வகுப்புகள்

இக்னோ பல்கலையில் தமிழில் வகுப்புகள்

இக்னோ பல்கலையில் தமிழில் வகுப்புகள்


UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை:
இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலையில் அதன் சேர்க்கை, பாடத்திட்டங்களை மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை பின்பற்றியே நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழ் வழியில் பாடம் கற்பிப்பதற்காக இப்பல்கலையின் மதுரை மையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.ஸ்வயம் பிரபா என்ற தொலைக்காட்சி மூலம் தினமும் தமிழில் பாடம் கற்பிக்கப்படுகிறது. இக்னோவின் பல்வேறு பட்டப்படிப்புகளுக்காக இதுவரை 368 அமர்வுகள் (தமிழில் வகுப்புகள்) மதுரை காமராஜ் பல்கலை, திருச்சி பாரதிதாசன் பல்கலை, திண்டுக்கல் காந்திகிராம பல்கலை, காரைக்குடி அழகப்பா பல்கலை பேராசிரியர்கள் மூலம் நடத்தப்பட்டுள்ளது. இந்த ஒளிபரப்பு நிகழ்ச்சிகள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டு, மாணவர்கள் தேவைப்படும்போது யூ டியூப் மூலம் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மின் ஊடகத்தின் பதிவுகள் அனைத்தும் பொதுத் தேர்வுகள் மற்றும் பிறபோட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மற்ற மாணவர்களுக்கும் பயன்படுத்தும் வகையில் உள்ளன.திறன் மேம்பாட்டு கல்விக்காக மதுரை மண்டலத்தில் திருச்சி தேசிய மகளிர் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்துடனும், திருவாரூர், மதுரை, காரைக்குடி, சிவகாசி ஜன்சிக்ஷன் மையங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டு, இக்னோவில் படிக்கும் மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.இக்னோவில் பல்வேறு படிப்புகளுக்கான ஜூலை- 2023 பருவத்திற்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. ஆன்லைன் மூலம் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூலை 31. விவரங்களுக்கு rcmadurai@ignou.ac.in அல்லது தொலைபேசி எண்- 0452 238 0733 ல் தொடர்பு கொள்ளலாம் என, இயக்குனர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us