UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM
ADDED : ஜூலை 28, 2023 01:27 PM
அ நிறம் | அளவு
சென்னை:
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள மருத்துவ படிப்பிற்கான மாணவர் சேர்க்கை, ஆக., 14ம் தேதி முதல் துவங்குகிறது.அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில் உள்ள பி.எஸ்சி. நர்சிங் பி.பார்ம் உள்ளிட்ட 19 வகையான நான்கு ஆண்டு பட்டப் படிப்புகளுக்கு 13,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 66,696 பேர் விண்ணப்பித்துள்ளனர்.இதற்கான தரிவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை ஆக. 14ம் தேதி துவங்குகிறது. மேலும் விபரங்களுக்கு tnhealth.tn.gov.in tnmedicalselection.net ஆகிய இணையதளங்களை பார்க்கலாம்.
