தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பசுமை பள்ளிக்கூடம் திட்டம் துவக்கம்

பசுமை பள்ளிக்கூடம் திட்டம் துவக்கம்

பசுமை பள்ளிக்கூடம் திட்டம் துவக்கம்


UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM

ADDED : ஜூலை 28, 2023 09:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2023 12:00 AM ADDED : ஜூலை 28, 2023 09:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை, கலைவாணர் அரங்கில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஐ.நா., சுற்றுச்சூழல் திட்ட செயல் இயக்குனர் இங்கர் ஆண்டர்சன், திட்டத்தை துவக்கி வைத்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், டென்மார்க் நாட்டின் காலநிலை கொள்கை அமைச்சர் டான் ஜானகிக் ஜார்கென்சன், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிரான பிரசாரம், அனைத்து பள்ளிகளிலும், ஐ.நா., சுற்றுச்சூழல் திட்டத்தால் மேற்கொள்ளப்படும். பசுமை புரட்சியை, இளைய தலைமுறையினரிடம் இருந்து துவக்க, தமிழக அரசு சார்பில், முதல் கட்டமாக 25 பள்ளிகள் பசுமை பள்ளிகளாக மாற்றப்பட உள்ளன.இப்பள்ளிகளில், சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி; காய்கறி தோட்டம், மூலிகைப் பண்ணை அமைத்தல்; மரம் நடுதல்; பிளாஸ்டிக் இல்லாத சூழலை உருவாக்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்காக ஒரு பள்ளிக்கு, 20 லட்சம் ரூபாய் வீதம் வழங்க, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் நகர்ப்புற குளிரூட்டும் திட்டமும் துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வெப்ப குறியீட்டை குறைக்க, பல்வேறு புது மாதிரியான தீர்வுகள் செயல்படுத்தப்படும்.50 பள்ளிகள் தேர்வு
அமைச்சர் மெய்யநாதன் அளித்த பேட்டி: 
தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில், 25 பள்ளிகளை பசுமை பள்ளிகளாக மாற்ற, 5 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு, நிதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு, 50 பள்ளிகளை தேர்வு செய்து, இரண்டு மாதங்களில் நிதி வழங்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, மீண்டும் மஞ்சப்பை பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அனைத்து பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை கொண்டு செல்வது நோக்கம். மீண்டும் மஞ்சப்பை விற்பனை இயந்திரம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வைக்கப்படுகிறது.திருவிழாக்கள் நடக்கும் இடங்களில் வைக்கவும் திட்டமிட்டு உள்ளோம். மக்கள் மனதில் பிளாஸ்டிக் பயன்படுத்தக்கூடாது என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us