UPDATED : ஜன 11, 2010 12:00 AM
ADDED : ஜன 11, 2010 11:27 AM
சென்னை லயோலா கல்லூரியின் புள்ளியியல் துறை துவங்கி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, புள்ளியியல் மற்றும் தகவல் பகுத் தாய்வு குறித்த, "ஐ.சி.எஸ். ஐ.ஏ., 2010&' என்ற தலைப் பில், சர்வதேச மாநாடு இன்று முதல் 13ம் தேதி வரை லயோலா கல்லூரியில் நடக்கிறது.
இம்மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து பேராசிரியர் கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள், புள்ளியியல் சார்ந்த வணிகம், தொழில்துறை, சுற்றுச்சூழல், மருத்துவம், நிர்வாகம் உள்ளிட்ட துறைகளில் புள்ளியியல் சார்ந்து ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்த ஆய்வு அறிக்கைகளை சமர்பித்து விவாதிக்க உள்ளனர். இந்த மாநாட்டில் சிறந்ததாக தேர்வு செய்யப் படும் கட்டுரைகளை பாடத் திட்டத்தில் சேர்க்க பரிந்துரையும் செய்யப் படவுள்ளது.
