UPDATED : ஆக 12, 2023 12:00 AM
ADDED : ஆக 12, 2023 04:08 PM
கோவை:
வேளாண் பல்கலை முதலாமாண்டு சான்றிதழ் சரிபார்ப்பு, அண்ணா அரங்கில் 14ம் தேதி நடைபெறவுள்ளதாக, டீன் வெங்கடேச பழனிசாமி தெரிவித்தார்.வேளாண் பல்கலை பட்டப்படிப்புகளுக்கான பொதுக்கலந்தாய்வின் இரண்டாம் கட்ட சுற்றின் நகர்வு முடிவுகள், நேற்று http://tnagfi.ucanapply.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் முடிவில் ஏற்பட்ட காலியிடங்களுக்கு, மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, 14ம் தேதி நடைபெறவுள்ளது. டீன் வெங்கடேச பழனிசாமி கூறுகையில், மூன்றாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புக்கான காலஅட்டவணை, குறுஞ்செய்தி மாணவர்களின் மின்னஞ்சல், மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அட்டவணையின் படி, சான்றிதழ்களுடன் பங்கேற்க வேண்டும். விபரங்களுக்கு, 94886 35077, 94864 25076 ஆகிய எண்களில் காலை, 9:00 முதல் 5:00 மணி வரை தொடர்பு கொள்ளலாம், என்றார்.
