தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/துபாயில் ஒரு தமிழ் பறவை!

துபாயில் ஒரு தமிழ் பறவை!

துபாயில் ஒரு தமிழ் பறவை!


UPDATED : ஆக 13, 2023 12:00 AM

ADDED : ஆக 13, 2023 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2023 12:00 AM ADDED : ஆக 13, 2023 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

துபாய்:
துபாயில் முதல் தமிழ் நுாலகத்தை துவங்கியுள்ளார் ஈரோடில் பிறந்த தமிழ் ஆராய்ச்சியாளர் ஸ்ரீ ரோகினி. அவர் அளித்த பேட்டி:
எனது தமிழ் ஆர்வமே இட்லியில் பிறந்தது. ஆம், எனக்கு சிறு வயதில் இட்லி மீது கொள்ளை பிரியம். எனது தந்தை ஒரு திருக்குறள் ஒப்புவித்தால் ஒரு இட்லி என கூறினார். அப்படி படிக்க தொடங்கி 5ம் வகுப்பிலேயே 1330 குறளையும் பொருளுடன் ஒப்புவித்து, உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றேன். அன்று தொடங்கிய தமிழ் ஆர்வம் தான் என்னை இத்தனையும் செய்ய வைத்தது. தகவல் தொழில்நுட்பம் படித்துவிட்டு, தேசிய நெடுஞ்சாலை துறையில் 2 வருடம் வேலை செய்தேன். திருமணத்திற்கு பின் வேலையை உதறிவிட்டு, கணவருடன் துபாயில் குடிபெயர நேர்ந்தாலும் தமிழ் ஆர்வம் என்னை விடவில்லை. 2014ல் அங்கு குழந்தைகளுக்கு மாலை நேர தமிழ் வகுப்புகள் எடுக்க தொடங்கினேன். 9 ஆண்டுகளில் கற்றல் கல்வி மையமாக வளர்ந்துள்ளது. கணவரும் என் தமிழ்ப்பணிக்கு ஆதரவு தருகிறார்.வகுப்புகளை சுற்றி தமிழ் அறிஞர்களின் புகைப்படங்களையும், இலக்கிய படங்களையும் ஒட்டிவைப்போம். அதனை பார்த்து குழந்தைகள் கேள்வி கேட்கும் பொழுது அந்த ஆர்வத்திலேயே சொல்லி கொடுப்பதால், அவர்களால் எளிதில் புரிந்து கொள்ளமுடியும். அப்படி ஒரு குழந்தையுடன் தொடங்கிய வகுப்பு இப்பொழுது 350 குழந்தைகளுடன் கற்றல் கல்வி மையமாக செயல்பட்டு வருகிறது. மொழி, வாழ்வியல் சார்ந்து ஏழு புத்தகங்களை எழுதியுள்ளேன். மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக, சொற்பொழிவாளராக, ஆய்வாளராக விருதுகள், பாராட்டுகள் பல தானாகவே வந்து சேர்ந்தன. அத்தனை விருதுகளையும் எனது பெற்றோருக்கு சமர்ப்பிக்கிறேன். விருதுகளை காட்டிலும் பெருமை என் மகள் காதம்பரி. அவர் 6 வயதிலேயே கவிதை புத்தகம் எழுதி பரிசுகளை வென்றார். கொரோனா காலத்தில் தாத்தா பாட்டியை சந்திக்க முடியாத ஏக்கத்தில் கவிதைகள் எழுதினார். அதை நான்கு மொழிகளில் மொழிபெயர்த்து புத்தகமாக வெளியிட்டோம். பல பரிசுகளை பெற்றார். 2021ல் உலக மனிதநேய நாளில் ஐக்கிய நாடுகள் சபையிலும் பேசினார் என் மகள்.எங்கள் குடும்பமே பரம்பரையாக தமிழ் ஆர்வலர்கள் தான். எனது கொள்ளுத் தாத்தா ஓமலூரைச் சேர்ந்த முத்து, தனது பேனா நண்பர் சுஜோ மாட்சுனோகாவிற்கு தமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்க உதவினார். அதனால் ஜப்பான் முத்து என பெயர் பெற்றார். அவரின் தமிழ்ப்பணியை பாராட்டி ஜப்பான் அரசு அஞ்சல் தலையை வெளியிட்டது. தாத்தா ஜப்பானில் தமிழ் வளர்த்தார், நான் துபாயில் தமிழை வளர்க்கிறேன். துபாயின் தமிழ் வானொலி நிலையத்துடன் இணைந்து முதல் தமிழ் நுாலகத்தை உருவாக்கியுள்ளேன். யாரிடமும் உதவிகள் கேட்டதில்லை. பொருளாதார நெருக்கடிகளை சந்தித்தாலும் நாங்கள் ஓய்ந்து போகவில்லை என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us