UPDATED : ஆக 15, 2023 12:00 AM
ADDED : ஆக 15, 2023 11:22 AM
அ நிறம் | அளவு
சென்னை:
பேராசிரியர் நன்னன் நுால்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு, நுால் உரிமைத் தொகை, 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை, நேற்று தலைமைச் செயலகத்தில், நன்னன் மனைவி பார்வதி அம்மாளிடம், முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா, தமிழ் வளர்ச்சித்துறை செயலர் செல்வராஜ், இயக்குனர் அவ்வை அருள், நன்னன் குடும்பத்தினர் பங்கேற்றனர். நன்னன் மகள் அவ்வை, முதல்வருக்கு நன்றி தெரிவித்து கவிதை வாசித்தார்.
