தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சீர்மிகு மதுரை: கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

சீர்மிகு மதுரை: கல்லுாரி மாணவர்கள் அசத்தல்

சீர்மிகு மதுரை: கல்லுாரி மாணவர்கள் அசத்தல்


UPDATED : ஆக 15, 2023 12:00 AM

ADDED : ஆக 15, 2023 11:12 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 15, 2023 12:00 AM ADDED : ஆக 15, 2023 11:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முதல்வர் பழனிநாதராஜா தலைமை வகித்தார். டெக் கம்யூனிட்டி ராஜலட்சுமி முன்னிலை வகித்தார். மாணவர்கள் ஸ்ரீநிவாஸ், ஹிருஷிகேஷ், ஆதித்யா, நாகேஷ், சந்தோஷ் ஆகியோர், மதுரை பசுமை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஆப் பை உருவாக்கி அதில் கழிவுகளை கண்ட இடங்களில் கொட்டாமல் அவற்றை குறிப்பிட்ட இடங்களில் கொடுத்து பணம் பெற்றுக் கொள்ளுதல் மூலம் மதுரையை பசுமையாக வைத்திருக்க உதவுதல், பொதுமக்களுக்கும் வருமானம் பெறும் வகையில் விளக்கம் அளித்தனர். இதற்கு முதல் பரிசாக ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்டது.சாலை விபத்துக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் வழிமுறைகளை வகுத்துக் கொடுத்த தியாகராஜர் பொறியியல் முதுகலை மாணவர்கள், நகரின் மேம்பாட்டிற்கான வரைபடத்தை உருவாக்கிய தியாகராஜர் பொறியியல் கல்லுாரி குழு, திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ., பொறியியல் கல்லுாரி குழுவினருக்கு 2ம் பரிசாக தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப்பட்டது. இயற்கை கழிவுகளின் மதிப்பு, பயன்படுத்தும் விதம் குறித்த வழிமுறைகளை உருவாக்கிய தியாகராஜர் பொறியியல் கல்லுாரி இரு குழுவினர், சேது இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மாணவர்கள் குழுவிற்கு தலா ரூ. 15,000 வழங்கப்பட்டது.எச்.சி.எல்., டெக்னாலஜி இயக்குநர் திருமுருகன் சுப்புராஜ், கல்லுாரி தொழில்நுட்ப வளர்ச்சி வணிக முனையத்தின் தலைமை செயல் அதிகாரி செபின்சன்னி, பேராசிரியர்கள் சந்திரன், கார்த்திகா, நிஷா, அசோக்குமார், டெக் கம்யூனிட்டி நிர்வாகிகள் ரமேஷ், கலா, கிருஷ்ணகுமார், விமலா, ராஜலட்சுமி கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us