தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா போட்டிகள்

மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா போட்டிகள்

மாணவர்களுக்கு புத்தகத் திருவிழா போட்டிகள்


UPDATED : ஆக 16, 2023 12:00 AM

ADDED : ஆக 16, 2023 09:25 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2023 12:00 AM ADDED : ஆக 16, 2023 09:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் நடக்க உள்ள புத்தக திருவிழா 2023 ஐ முன்னிட்டு மாணவர்களை பங்கேற்க செய்யும் வகையில் இவர்களுக்கான பல்வேறு போட்டிகள் ஆக.19 ல் திண்டுக்கல்,பழநி, வேடசந்துார்,வத்தலக்குண்டு என நான்கு இடங்களில் நடக்கிறது .மாவட்ட நிர்வாகம் ,திண்டுக்கல் இலக்கியக்களம் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா 2023 அக்டோபர் 5 முதல் 15 வரை திண்டுக்கல் டட்லி மேல்நிலைப்பளளி மைதானத்தில் நடக்கிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்களை அதிகளவில் பங்கேற்க ஏதுவாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளது. அதன்படி ஆக.19 ல் திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி, பழநி நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வேடசந்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வத்தலகுண்டு இக்பாலியா மேல்நிலைப்பள்ளியில் போட்டிகள் நடைபெற உள்ளன.பேச்சு, கவிதை, கட்டுரை, ஓவியம் என 4 போட்டிகள் தமிழ் ,ஆங்கிலத்தில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் 6 முதல் 8 ம் வகுப்பு, 9, 10 வகுப்பு, 11 ,12 ம் வகுப்பு என 4 பிரிவுகளாக நடக்கிறது. பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் , முதல் 3 இடங்களை பிடிப்போருக்கு பரிசு, சான்றிதழ்களும் வழங்கப்பட உள்ளது. போட்டிகளுக்கான தலைப்புகள் தபால் ,மின்னஞ்சல் வாயலாக அனைத்து பள்ளி, கல்லுாரிகளுக்கு அனுப்பட்டுள்ளன. தகவல் கிடைக்காத மாணவர்கள் நேரடியாக பள்ளி ஆசிரியர் ,பெற்றோருடன் போட்டிகள் நடைபெறும் இடத்தில் கலந்து கொள்ளலாம்.சந்தேகங்களுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தராஜ் , திண்டுக்கல் 97815 69823, அரங்க பெருமாள், வேடசந்துார் 94886 53338, மாரிமுத்து, பழநி 80985 87608, வளர்மதி, வத்தலகுண்டு 94871 81727ல் தொடர்பு கொள்ளலாம். இதனை இலக்கியக்கள தலைவர் மனோகரன், செயலர் ராமமூர்த்தி, பொருளாளர் மணிவண்ணன் , நிர்வாக செயலர் கண்ணன் தெரிவித்தனர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us