தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கலந்தாய்வில் முறைகேடு: பேராசிரியர்கள் குமுறல்

கலந்தாய்வில் முறைகேடு: பேராசிரியர்கள் குமுறல்

கலந்தாய்வில் முறைகேடு: பேராசிரியர்கள் குமுறல்


UPDATED : ஆக 17, 2023 12:00 AM

ADDED : ஆக 17, 2023 09:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2023 12:00 AM ADDED : ஆக 17, 2023 09:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கீழ், பொறியியல் கல்லுாரி அமைச்சு பணியாளர்கள், தொழில்நுட்ப அலுவலர்களுக்கு நடந்த கலந்தாய்வில், முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.ஆண்டுதோறும் இடமாறுதல் கலந்தாய்வு, ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டில், அலுவலர்கள் பிரிவின் கீழ், சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குனரக கட்டடத்தில், கடந்த, 11ம் தேதி நடைபெற்றது. 11ம் தேதி கலந்தாய்வு நடைபெற்ற நிலையில், 10க்கும் மேற்பட்டவர்களுக்கு, 8ம் தேதி கையெழுத்திட்டு சுயவிருப்பத்தின் பேரில் இடமாறுதல் வழங்கப்பட்டு; அவ்விடங்கள் கலந்தாய்வில் மறைக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் கலந்தாய்வு தேதிக்கு, இரண்டு நாட்கள் முன் சென்னை வர அறிவுறுத்துகின்றனர். நடப்பாண்டிலும், 11ம் தேதி இடமாறுதல் கலந்தாய்வுக்கு, 8ம் தேதி தகவல் தெரிவித்தனர். அனைவரும், ரயிலில் முன்பதிவு செய்ய முடியாமல், கிடைத்த பஸ்களில் சிரமத்துடன் சென்னை சென்றோம். கலந்தாய்வின் போது, பல்வேறு விதிமீறல்கள் நடந்தன. முதல்வரின் நேர்முக உதவியாளர், பொருளாளர் உள்ளிட்ட பதவிக்கு, அதற்கு இணை பொறுப்பில் உள்ள ஜூனியர் உதவி இயக்குனர் ஒருவர், கலந்தாய்வை நடத்தியது விதிமீறல். ஒரே சமநிலையில் உள்ளவர்கள், கலந்தாய்வை நடத்த இயலாது.அரசாணையின் படி, கலந்தாய்வு முடிந்த மாலை இடமாறுதல் ஆணை வழங்கப்பட வேண்டும். ஆனால், தொழில்நுட்ப கல்வி இயக்குனர் முடிவு செய்வார் என, எங்களை திருப்பி அனுப்பினார்கள். அவர் முடிவு செய்வார் எனில், கலந்தாய்வு ஏன் நடத்தவேண்டும் என புரியவில்லை. கலந்தாய்வு நடப்பதாக அறிவித்த பின், 8ம் தேதி 10 பேருக்கு அதுவும், சுயவிருப்பத்தின் படி மாறுதல் என குறிப்பிட்டு இடமாற்றம் செய்துள்ளனர். பணத்தை வாங்கிக்கொண்டு பகிரங்கமாக, சுயவிருப்ப மாறுதல் என குறிப்பிடும் அளவிற்கு, அச்சமின்றி முறைகேடுகள் அதிகரித்துள்ளன. அரசு தலையிட்டு தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us