தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னையில் போராட்டம் சிறப்பாசிரியர்கள் அறிவிப்பு

சென்னையில் போராட்டம் சிறப்பாசிரியர்கள் அறிவிப்பு

சென்னையில் போராட்டம் சிறப்பாசிரியர்கள் அறிவிப்பு


UPDATED : ஆக 22, 2023 12:00 AM

ADDED : ஆக 22, 2023 10:00 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2023 12:00 AM ADDED : ஆக 22, 2023 10:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருச்சி:
சிறப்பு ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, சென்னையில், மாநிலம் முழுவதும் இருந்து வரும் சங்கத்தினர், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவர் என தமிழ்நாடு பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.இது குறித்து, அந்த சங்கத்தின் மாநில தலைவர் சேசுராஜா கூறியதாவது:தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில், 2012ல் உடற்கல்வி, ஓவியம், தையல் என எட்டு துறைகளில், 16,549 சிறப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். கடந்த 13 ஆண்டுகளாக இவர்களுக்கு, 10,000 ரூபாய் தொகுப்பு ஊதியம் வழங்கப்படுகிறது. பணி நிரந்தரம், ஊதிய உயர்வு போன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அ.தி.மு.க., அரசுக்கும், தி.மு.க., அரசுக்கும் மனுக்களாக கொடுத்தோம்; எந்தவித பயனும் இல்லை.கடந்த தேர்தலின் போது, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில், பகுதி நேர சிறப்பாசிரியர்கள், பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று தெரிவித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளாகியும், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. எனவே, சிறப்பாசிரியர்களை உடனடியாக பணி நிரந்தம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, செப்., 4, 21 மற்றும் 28 ஆகிய தேதிகளில், மாவட்ட தலைநகரங்களில் உள்ள கலெக்டர் அலுவலகம் முன், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்யப்படும்.தீர்வு கிடைக்காவிட்டால், சென்னையில், மாநிலம் முழுவதும் இருந்து வரும் சங்கத்தினர், போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பாசிரியர்களுக்கு, 28,000 ஊதியம், இ.எஸ்.ஐ., - பி.எப்., போன்ற சலுகைகள் வழங்க உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us