தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாரதியார் பல்கலையில் பட்டமளிப்பு விழா

பாரதியார் பல்கலையில் பட்டமளிப்பு விழா

பாரதியார் பல்கலையில் பட்டமளிப்பு விழா


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கவர்னர் ரவி தலைமை வகித்து மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 93,036 பேர் பட்டம் பெற்றனர். நிகழ்ச்சியில், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினர் சஞ்சீவ் சன்யால் மனதை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுங்கள்; உங்களுக்கான பாதையை அதன் போக்கில் உணர்ந்து கொள்ளுங்கள். தற்போது பார்வையாளர்களாக உள்ள பலர், நாளை தனக்கான அடையாளத்தை, சாதனையை இதுவரை உருவாகாத ஒரு துறையில் ஏற்படுத்தலாம் என்றார்.பல்கலையின் கீழ், 38 வது பட்டமளிப்பு விழாவில், ஆராய்ச்சி, முதுநிலை, இளநிலை, கல்வியியல் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் சேர்த்து, 93,036 பேர் பட்டம் பெற்றனர். பட்டமளிப்பு விழாவில் திருநங்கை பியூட்டிலினா, 28, வணிகவியல் பிரிவின் கீழ், பிஎச்.டி., பட்டத்தை கவர்னர் ரவியிடம் இருந்து பெற்றார். நிகழ்வில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, துறை செயலர் கார்த்திக், பதிவாளர் முருகவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.சாதித்த திருநங்கை
பட்டமளிப்பு விழாவில் திருநங்கை பியூட்டிலினா, 28, வணிகவியல் பிரிவின் கீழ், பி.எச்டி., பட்டத்தை கவர்னர் ரவியிடம் இருந்து பெற்றார்.அவர் கூறுகையில் கஷ்டப்படும் குடும்பத்தில் தான் இருந்து வந்தேன். பள்ளி பருவத்தில், குறிப்பிட்ட வயதுக்கு பின் என்னிடம் உள்ள பெண்மையை உணர்ந்தேன். நடை, பேச்சு வழக்கில் ஏற்பட்ட சில மாற்றங்களை சக நண்பர்கள் கிண்டல் செய்தனர்; பலர் ஆதரவாகவும் இருந்தனர்.பள்ளி ஆங்கில ஆசிரியரின் ஊக்குவிப்பால், உயர்கல்வியில் சேர்ந்து படித்தேன். பெற்றோர் இறந்த பின், என் எதிர்காலத்திற்காக பணிக்கு சென்று கொண்டே படிக்க துவங்கினேன். தற்போது, முனைவர் பட்டம் முடித்துள்ளேன். இது மிகவும் மகிழ்ச்சியான தருணம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us