தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுநிலை மருத்துவம் கல்லுாரிகளுக்கு வாய்ப்பு

முதுநிலை மருத்துவம் கல்லுாரிகளுக்கு வாய்ப்பு

முதுநிலை மருத்துவம் கல்லுாரிகளுக்கு வாய்ப்பு


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 11:02 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 11:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
அங்கீகாரம் நிலுவையில் உள்ள மருத்துவ கல்லுாரிகளும், முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களை அதிகரிப்பதற்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய மருத்துவ ஆணையமான, என்.எம்.சி., தெரிவித்து உள்ளது.மருத்துவக் கல்லுாரிகளில், எம்.டி., எம்.எஸ்.,  டி.எம்.,  எம்.சி.ஹெச் போன்ற முதுநிலை மருத்துவ படிப்புகளை துவங்கவும், அதற்கான இடங்களை அதிகரிக்கவும், செப்., 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, என்.எம்.சி., சமீபத்தில் அறிவித்தது. இது, ஏற்கனவே அங்கீகாரத்துக்கு விண்ணப்பித்து காத்திருக்கும் கல்லுாரிக்களுக்கும் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது.இதைத்தொடர்ந்து, என்.எம்.சி., வெளியிட்ட அறிவிப்பு:
மருத்துவக் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் மற்றும் அவற்றை புதுப்பிக்க கோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. அவற்றின் மீது, விரைவில் முடிவுகள் எடுக்கப்படும். அதேநேரம், அடுத்த கல்வியாண்டில் முதுநிலை இடங்களை அதிகரிப்பதற்கான விண்ணப்பங்களை அங்கீகாரம் நிலுவையில் உள்ள கல்லுாரிகளும் சமர்ப்பிக்கலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us