தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாசிக்கும் பழக்கம் குறைவது நல்லதல்ல

வாசிக்கும் பழக்கம் குறைவது நல்லதல்ல

வாசிக்கும் பழக்கம் குறைவது நல்லதல்ல


UPDATED : ஆக 25, 2023 12:00 AM

ADDED : ஆக 25, 2023 05:47 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2023 12:00 AM ADDED : ஆக 25, 2023 05:47 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
உலக அரங்கில் பெரிய கவுரவம் இந்தியாவிற்கு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியர்களின் அறிவு என, ஆச்சாரியா கல்வி நிறுவனங்களின் தலைவர் அரவிந்தன் பேசினார்.புதுச்சேரி ஆச்சாரியா பால சிக் ஷா மந்திர் பள்ளியில் நடந்த தினமலர் வினாடி வினா நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
சந்திரயான் நிலவில் தடம் பதித்துள்ள இந்த நேரத்தில் உலக நாடுகள், இந்தியாவை கொண்டாடுகின்றன. மெய்சிலிர்த்து இந்திய விஞ்ஞானிகளை பார்க்கின்றன. குறைவான பட்ஜெட்டில் இவ்வளவு பெரிய திட்டம் வெற்றி கரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதால், உலக அரங்கில் இந்தியாவிற்கு பெரிய கவுரவம் கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியர்களின் அறிவு. அந்த அறிவு தான் நமது ஆற்றலாகவும், ஆளுமையாகவும் மாறியுள்ளது. உலகில் ஆளுமையில் உள்ளவர்கள் அனைவரும் அறிவு சார்ந்தே உள்ளனர். உடல் பலம் ஒரு காலத்தில் எடுபட்டது. ஆனால் இன்று செயற்கை நுண்ணறிவை நோக்கி செல்லும் காலகட்டத்தில் அறிவு ரொம்ப முக்கியம்.தேசிய கல்வி கொள்கையில் ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழியில் படிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது மிக நல்ல விஷயம். அதற்கு, முன் மாதிரியாக பட்டம் இதழை தினமலர் கொண்டு வந்துள்ளது பாராட்டுக்குரியது. தாய் மொழியில் புரிந்து படிக்கும் கல்வி சிறப்பதானாக இருக்கும். கற்றலில் புரிதல் இருந்தால் தான் அடுத்த இடத்திற்கு செல்ல முடியும். தாய்மொழியில் படிப்பது, தவறு இல்லாமல் தமிழில் எழுதுவது, மதிப்பெண் எடுப்பது சவாலாக உள்ளது. தமிழ் அற்புதமான மொழி. தமிழில் வாசிப்பது சுவையான சாப்பாடு மாதிரி. ரசித்து, புரிந்து படிக்கலாம்.நமக்கு தெரிந்த தமிழ் மொழியில், நமக்கு தெரிந்த எளிய நடையில் வேறு ஒரு கோணத்தில் தினமலர் கொண்டு வந்து சேர்த்து வருகிறது. அது நமக்கு வேறு புரிதலையும், சிந்தனையும் கொடுக்கும். மாணவர்களுக்கென பட்டம் இதழை குறைந்த பட்ஜெட்டில் கொண்டு வந்துள்ளனர். இதுவும் பாராட்டுகுரியது. மாணவர்கள் வாசிப்பது இன்றைக்கு குறைந்துவிட்டது. இது நல்ல அறிகுறி அல்ல. சினிமா, யூடியூப், பேஸ்புக் அதிகம் பார்க்கின்றனர். அதனால் கவனம் செலுத்தி படிப்பது குறைந்துவிட்டது. 10 செகண்ட் வரை தான் படிக்கின்றனர். தொடர்ந்து பல மணி நேரம் கவனம் செலுத்தி படிப்பது இன்றைய தலைமுறையினரிடம் குறைந்துவிட்டது.எனவே மாணவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரமாதமாக வடிவமைத்து பட்டம் இதழை தினமலர் மாணவர்களிடம் கொண்டு வந்து சேர்த்துள்ளது. அந்த விஷயத்திலும் தினமலர் மேலோங்கி நிற்கின்றது. பதில் சொல்; அமெரிக்கா செல் வினாடி வினா மூலம் நாளைய தலைமுறையினரை இன்றைக்கே தினமலர் தேர்வு செய்து ஊக்குவிக்கின்றது. இன்றைக்கு கூகுள், சாட்ஜிபிடி., தகவல்களை அள்ளி தரலாம்.ஆனால் என்றைக்கும் மூளை உள்ள ஆட்கள் தான் எப்போதும் மேலோங்கி நிற்பர். கூகுள், சாட்ஜிபிடியை நம்பி இருப்பவர்கள் சாதாரணமானவர்கள். அறிவை தேடி தேடி சேகரிப்பவர்கள் அசாதாரணமானவர்கள். அவர்களுக்கு தான் எப்போதும் மக்களிடம் மதிப்பு மேலோங்கி இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us