UPDATED : செப் 03, 2023 12:00 AM
ADDED : செப் 03, 2023 01:51 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்:
காரைக்கால் அரசு உள்விளையாட்டு அரங்கில் இன்டர்நேஷனல் தற்காப்புக்கலை மற்றும் யோகா போட்டிகள் நடந்தது.இதில், மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த கராத்தே, டேக்வாண்டோ, சிலம்பம், யோகா வீரர்கள் கலந்து கொண்டனர். இதன் பரிசளிப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ.,க்கள் நாஜிம், தியாகராஜன் முன்னிலை வகித்தனர். ஒருங்கிணைப்பாளர் குமார் வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் சந்திரபிரியங்கா பரிசு வழங்கி பாராட்டினார்.
