தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/புதுமைப்பெண் திட்டம்: மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

புதுமைப்பெண் திட்டம்: மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

புதுமைப்பெண் திட்டம்: மாணவிகள் விண்ணப்பிக்கலாம்


UPDATED : செப் 04, 2023 12:00 AM

ADDED : செப் 04, 2023 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2023 12:00 AM ADDED : செப் 04, 2023 10:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்:
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்த அரசு கலை கல்லுாரிகள், தொழில் நுட்ப கல்லுாரி மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் மாதந்தோறும் ரூ.1000 பெற செப்.4 முதல் விண்ணப்பிக்கலாம்.மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி புதுமைப்பெண் திட்டத்தில், அரசு பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்து மேல் படிப்பு தொழில் நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் 2023-24ம் கல்வியாண்டிற்கு மாணவிகள் சேர்க்கை www.pudhumaipenn.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப். 4ல் துவங்க உள்ளது. சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மூலம் மட்டுமே மாணவிகள் விண்ணப்பிக்க வேண்டும்.தகுதி வரம்பு குறித்து அனைத்து மாணவிகளுக்கும் கல்வி பயிலும் நிறுவனங்களில் செப்.4 முதல் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. மாணவிகள் ஆதார் அட்டை, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள அலைபேசி எண், வங்கி கணக்கு எண், மாற்று சான்றிதழ் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லூரியில் உள்ள திட்ட பொறுப்பு அலுவலரை தொடர்பு கொள்ளலாம், என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us