தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ டே வித் போலீஸ் நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட மாணவிகள்

ஏ டே வித் போலீஸ் நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட மாணவிகள்

ஏ டே வித் போலீஸ் நிகழ்ச்சியில் துப்பாக்கியால் சுட்ட மாணவிகள்


UPDATED : செப் 04, 2023 12:00 AM

ADDED : செப் 04, 2023 10:23 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 04, 2023 12:00 AM ADDED : செப் 04, 2023 10:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஏ டே வித் போலீஸ் நிகழ்ச்சியில், மாணவிகள் குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றனர்.கோவை மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் துவங்கிய பிராஜெக்ட் பள்ளிக்கூடம் 2.O திட்டத்தில், மாவட்ட போலீசார் பள்ளி குழந்தைகளுக்கு, பாலியல் ரீதியான விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.பள்ளி மாணவிகளுக்கு, தற்காப்பு கலையும் கற்றுக் கொடுக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, ஆலாந்துறை போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட, அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும், 30 மாணவிகளுக்கு, திங்கள் முதல் வியாழன் வரை, நான்கு நாட்கள் தற்காப்பு கலைகள் கற்றுக் கொடுக்கப்பட்டன. அவர்களுக்கு, நேற்று மாவட்ட போலீஸ் அலுவலகத்தில், ஏ டே வித் போலீஸ் என்ற நிகழ்ச்சி, எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சியை தொடர்ந்து, மாணவிகள் அனைவரும் பி.ஆர்.எஸ்., வளாகத்திற்கு சென்று பல்வேறு நிகழ்வுகளில் இறந்த போலீசாரின், நினைவு துாண்களை பார்வையிட்டனர். அதன் பின், கோவை மாவட்ட ஆயுதப்படையில் அமைந்துள்ள ஆயுதக் கிடங்கில் போலீசாரின் துப்பாக்கிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் கோவை ரைபிள் கிளப்பையும் பார்வையிட்டனர்.அங்கு துப்பாக்கிகளின் வகை மற்றும் அவற்றிற்கு இடையிலான வித்தியாசம் பற்றி, மாணவிகளுக்கு உயர் அதிகாரிகள் விளக்கினர். மாணவிகள் ஆர்வத்துடன் துப்பாக்கிகளை எடுத்து, குறிபார்த்து சுட்டு பயிற்சி பெற்றனர். இறுதியில் அதிகாரிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் அனைத்து மாணவிகளுக்கும் நினைவுப்பரிசாக வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us