தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

தேசிய தொழிற்தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு


UPDATED : செப் 10, 2023 12:00 AM

ADDED : செப் 10, 2023 10:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2023 12:00 AM ADDED : செப் 10, 2023 10:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தனித்தேர்வர்களாக பங்கேற்க, தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர், திறன்மிகு தேசிய தொழிற்சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர், மாநில தொழிற்பயிற்சி குழும தொழிற்பிரிவில் படித்து, தொழிற்பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தகுதி உள்ளவர்கள் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.பிற விண்ணப்பதாரர்கள், 2023, செப்., 18ல், 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்; வயது உச்சவரம்பு இல்லை. www.skiltraining.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து, விண்ணப்பம் மற்றும் விளக்க குறிப்பேடுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.தேர்வு கட்டணம் ரூ.200ஐ www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளம் வழியாகவோ அல்லது தமிழக அரசின் கருவூலம், ஸ்டேட் பாங்க் கருவூலக கிளை வழியாகவோ, இ-சலான் வாயிலாக செலுத்த வேண்டும்.தேர்வு கட்டணம் செலுத்தியதற்கான இ-சலான், கல்வி சான்றிதழ் நகல், இதர ஆவணங்களின் நகல் ஆகியவற்றை இணைத்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும், 18ம் தேதிக்குள் கோவை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us