UPDATED : அக் 24, 2023 12:00 AM
ADDED : அக் 24, 2023 11:25 AM
கோவை:
விஜயதசமி திருநாளை முன்னிட்டு, தினமலர் நாளிதழ் சார்பில் இன்று நடத்தப்படும் வித்யாரம்பம் நிகழ்வில், கோவையின் ஆளுமைகள் பங்கேற்று, குழந்தைகளின் பிஞ்சு விரல்கள் பிடித்து எழுத வைத்து, அறிவுப்பாதையின் அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர்.தினமலர் மாணவர் பதிப்பான பட்டம் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் இணைந்து, கல்விச்சாலைக்குள் அடியெடுத்து வைக்கவுள்ள குட்டிக் குழந்தைகளுக்கு, சரஸ்வதி தேவியின் அருள் கடாட்சம் முழுமையாகக் கிடைக்கும் வகையில், விஜயதசமி நாளான இன்று, வித்யாரம்பம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ராம்நகர், சத்தியமூர்த்தி ரோட்டில் உள்ள ஸ்ரீ ஐயப்ப பூஜா சங்கத்தில், இன்று காலை 8:00 மணியிலிருந்து, 10:30 மணி வரை நடந்த இந்நிகழ்வில், கோவையின் ஆளுமைகள் பங்கேற்று, குழந்தைகளின் பிஞ்சு விரல் பிடித்து, ஆண்டவனின் அருளுடன் அரிச்சுவடியை ஆரம்பித்து வைத்தனர்.இதில் பங்கேற்ற குழந்தைகளுக்கு, பிளேர் ரைட்டிங் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் சார்பில், எழுதுபொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. அரிச்சுவடி எழுதும், அந்த அழகிய தருணத்தை, புகைப்படம் எடுத்து, தினமலர் சான்றிதழுடன் இணைத்து, இலவசமாக வழங்கப்படும்.ஆரம்பித்து வைத்த ஆளுமைகள் டாக்டர் பக்தவத்சலம், தலைவர், கே.ஜி.மருத்துவமனை; வனிதாமோகன், நிர்வாக அறங்காவலர், சிறுதுளி; ஹேமலதா அண்ணாமலை, தலைவர், ஆம்பியர் வெகிக்கிள்ஸ்; டாக்டர். நிர்மலா, டீன், கோவை அரசு மருத்துவமனை; மணிமேகலை மோகன்தாஸ், நிர்வாக அறங்காவலர், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளிகள்.
