தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மொழிபெயர்ப்பு வித்தை எளிதாக்கும் விந்தை

மொழிபெயர்ப்பு வித்தை எளிதாக்கும் விந்தை

மொழிபெயர்ப்பு வித்தை எளிதாக்கும் விந்தை


UPDATED : அக் 30, 2023 12:00 AM

ADDED : அக் 30, 2023 10:33 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2023 12:00 AM ADDED : அக் 30, 2023 10:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

முன்பொரு காலத்தில், மொழிபெயர்ப்பு, கடினமான வேலையாக இருந்தது. கூகுள் மொழிபெயர்ப்பு கருவி வந்தவுடன் இது, சற்று எளிதானது. பல மொழிகளில் இருந்து நமக்கு வேண்டிய மொழிக்கு மொழிபெயர்ப்பு சாத்தியமாயிற்று.செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, vitra.ai என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம், மொழிபெயர்ப்பை மிக எளிதாக்கியிருக்கிறது. பத்து நிமிட வீடியோவை முப்பது வினாடி களில் மொழி மாற்றம் செய்து விட முடிகிறது. வாய்ஸ் ஓவர், டப்பிங், சப் டைட்டில் போன்றவையும் எளிதாகின்றன.கடந்த 2020இல் நிறுவப்பட்ட, இந்த ஸ்டார்ட் அப், உலக நாடுகளின் 75க்கும் மேற்பட்ட மொழிகளில் வீடியோக்கள், படங்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் உரைகளுக்கான மொழிபெயர்ப்பு சேவைகளை செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருக்கிறது.ஆழமான மொழிபெயர்ப்பு
மேம்பட்ட ஆழமான கற்றல் மாதிரிகளை இந்நிறுவனம் பயன்படுத்துகிறது. சொற்களை மட்டும் மொழிபெயர்க்காமல், சூழல்கள், மொழிச்சொற்கள் மற்றும் கலாசார அடிக்குறிப்புகளையும் கூட புரிந்து கொண்டு மொழி பெயர்ப்பதால், இதன் ஆழம் இணையற்றது.இதன் தனித்துவ அம்சங்களில் ஒன்று, அதன் மாற்றியமைக்கும் திறன்; மென்பொருள் கொண்டு, மொழிபெயர்ப்புகளை செய்து வந்தால், ஒவ்வொரு மொழிபெயர்ப்பிலும், தன்னைத்தானே கற்றுக்கொண்டு செம்மைப்படுத்துகிறது.பிளாக்கர்கள், பாட்காஸ்டர்கள் தங்கள் படைப்புகளை வேறு மொழிகளில் மொழிமாற்றம் செய்து பதிவேற்றம் செய்ய இலகுவானது. உலகின் பல நாடுகளுக்கும் தங்கள் பதிவுகளை கொண்டு செல்ல உதவுகிறது.வருவாய்க்கு வாய்ப்பு
உலகளவில் மொழிபெயர்ப்பு சந்தை, ஏறத்தாழ, 4.59 லட்சம் கோடி ரூபாய் மதிப்புடையது. இது 2025ம் ஆண்டு 5.41 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் வருமானம் ஈட்ட ஒவ்வொருவருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. vitra.ai இணையதளத்தை பயன்படுத்த சிறிது கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். அனைத்து மொழிபெயர்ப்பு நோக்கங்களுக்கும் தேவைப்படுவதாக இது இருக்கும்.தொடர்புக்கு:
www.vitra.ai.இ மெயில்:
support@vitra.ai, contact@vitra.ai.உங்கள் சந்தேகங்களுக்கு எழுதுங்கள்: 
இ- மெயில்:
Sethuraman.sathappan@gmail.com; மொபைல்போன்:
9820451259; இணையதளம்:
www.startupandbusinessnews.com

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us