தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தொழிலாளர் நலத்துறை கல்வி உதவித்தொகை!

தொழிலாளர் நலத்துறை கல்வி உதவித்தொகை!

தொழிலாளர் நலத்துறை கல்வி உதவித்தொகை!


UPDATED : அக் 31, 2023 12:00 AM

ADDED : அக் 31, 2023 09:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 31, 2023 12:00 AM ADDED : அக் 31, 2023 09:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
தொழிலாளர் நலத்துறை மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, நாமக்கல் மாவட்ட தொழிலார் நலத்துறை உதவி கமிஷனர் (அமலாக்கம்) திருநந்தன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கடந்த, 1972ம் ஆண்டு தமிழ்நாடு தொழிலாளர் நல நிதி சட்டப்படி, தொழிற்சாலைகள், கடைகள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, ஆண்டு தோறும் தொழிலாளர் மற்றும் நிறுவனத்தின் பங்காக, ஒவ்வொரு தொழிலாளிக்கும், 60 ரூபாய் வீதம் கணக்கிட்டு, நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தொழிலாளர் நல நிதி தொகையை, வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.அதன்படி, நடப்பு, 2023ம் ஆண்டிற்கான தொழிலாளர் நல நிதியை, 2024, ஜன., 31க்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு தொழிலாளர் நல நிதி செலுத்தும் நிறுவனங்களின் தொழிலாளர்கள் மற்றும் அவரை சேர்ந்தவர்களுக்கு, வாரியம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதில், பிரீ கே.ஜி., முதல் பட்ட மேற்படிப்பு வரை பயிலும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 1,000 முதல் 12,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை, பாடநுால் வாங்க உதவித்தொகை, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை ஆகிய திட்டங்களுக்கு, தொழிலாளர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.இந்த உதவித் தொகை பெற தொழிலாளரின் மாத ஊதியம், 25,000 ரூபாய்க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பங்களை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www.lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், செயலாளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு, வரும், டிச., 31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us