UPDATED : நவ 05, 2023 12:00 AM
ADDED : நவ 05, 2023 10:29 AM
சென்னை:
டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 41 இளநிலை உதவியாளர்களுக்கு அமைச்சர் முத்துசாமி பணி நியமன ஆணை வழங்கினார்.தமிழக வீட்டு வசதி வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு செய்யப்பட்ட 41 இளநிலை உதவியாளர்கள் மற்றும் கருணை அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட 7 இளநிலை உதவியாளர்கள் மற்றும் 2 அலுவலக உதவியாளர்கள் என மொத்தம் 50 நபர்களுக்கு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி கோயம்பேட்டில் அமைந்துள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் பணி நியமன ஆணை வழங்கினார். அப்போது தமிழக வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசு செயலாளர் சமயமூர்த்தி உள்ளிட்ட வாரிய உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
