UPDATED : நவ 10, 2023 12:00 AM
ADDED : நவ 10, 2023 09:37 AM
விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு டெங்கு மற்றும் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.வடகிழக்கு பருவமழையொட்டி, மாவட்ட பள்ளி கல்வித்துறை, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில், நடந்த கூட்டத்திற்கு, நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராமநாதன் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர்வினோத்குமார் முன்னிலைவகித்தார். வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் வரவேற்றார்.சுகாதார ஆய்வாளர்கள் கார்த்திகேயன், முருகவேல், முல்லைநாதன், சதீஷ் மற்றும் விருத்தாசலம் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் பலர் பங்கேற்றனர். இதில், வடகிழக்கு பருவமழை காரணமாக மாணவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. பள்ளிக்கூடம் மற்றும் வீடுகளில் கொசு புழுக்கள் உருவாகாமல் இருக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.தொடர்ந்து மூன்று நாட்கள் மாணவர்கள் யாரேனும் பள்ளிக்கு வரவில்லை என்றால் உடனடியாக சுகாதாரதுறைக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பன உட்பட பல்வேறு ஆலோசனைகள் வழங்கினர். அனைவருக்கும் நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட்டது.
