UPDATED : நவ 19, 2023 12:00 AM
ADDED : நவ 19, 2023 04:42 PM
அ நிறம் | அளவு
செஞ்சி:
கொணலுார் அரசு நடுநிலைப் பள்ளியில் அமைச்சர் மஸ்தான் ஆய்வு செய்தார்.செஞ்சி அடுத்த கொணலுார் அரசு நடுநிலைப் பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் அமைச்சர் மஸ்தான் திடீர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் குறித்தும், மாணவர்களின் வருகை, அடிப்படை வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஒன்றிய சேர்மன் விஜயகுமார், ஊராட்சி தலைவர் சுபா குமார், தலைமை ஆசிரியர் டேவிட் ஸ்டான்லி பிராங்க்ளின் உடனிருந்தனர்.
