UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 09:56 AM
அ நிறம் | அளவு
சென்னை:
தேனி: தேனி மாவட்டத்தில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த அதிகாரிகள் ஏற்பாடு செய்து வருகின்றனர்.தேனி மாவட்டத்தில் அக்., 25ல் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி ஆய்வு செய்தார். அப்போது மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையும் குறிப்பிட்டிருந்தார். மேலும் மாவட்டத்தில் ஏதேனும் கருகலைப்பு மையங்கள் செயல்படுகிறதா என அதிகாரிகள் ஆய்வுகள் செய்ய வலியுறுத்தி சென்றார்.இந்நிலையில் பெண்குழந்தைகள் பாதுகாப்பு, குழந்தை திருமணங்களை தடுத்தல் உள்ளிட்டவை குறித்து பள்ளி, கல்லுாரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
