UPDATED : நவ 24, 2023 12:00 AM
ADDED : நவ 24, 2023 04:48 PM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை சூலூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் 2ம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை ராகிங் செய்ததாக 3ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. சீனியர் மாணவர்கள் சொல்வதை கேட்காவிட்டால் கொலை செய்துவிடுவோம் என மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், 3ம் ஆண்டு மாணவர்கள் 2 பேர் மற்றும் டீக்கடை ஊழியர் ஒருவரை கைது செய்தனர்.
