தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிராமண மாணவிக்கு கட்டாயப்படுத்தி முட்டை ஊட்டிய ஆசிரியர் மீது புகார்

பிராமண மாணவிக்கு கட்டாயப்படுத்தி முட்டை ஊட்டிய ஆசிரியர் மீது புகார்

பிராமண மாணவிக்கு கட்டாயப்படுத்தி முட்டை ஊட்டிய ஆசிரியர் மீது புகார்


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 07:34 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 07:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஷிவமொகா:
பிராமண மாணவிக்கு வலுக்கட்டாயமாக முட்டை ஊட்டி விட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்&' என்று கல்வி துறையில் மாணவியின் தந்தை புகார் அளித்துள்ளார்.கர்நாடகாவில் அரசு பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்துக்காக, மதிய உணவுடன், வாழைப்பழம், முட்டை அல்லது கடலை மிட்டாய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ஷிவமொகா மாவட்டம், கமச்சி கிராமத்தை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், பொது உத்தரவு துணை இயக்குனருக்கு கடந்த 21ம் தேதி ஒரு கடிதம் எழுதி உள்ளார்.அதில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:
ஹொசநகரில் உள்ள கர்நாடகா பப்ளிக் பள்ளியில், எனது மகள் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். நாங்கள் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். கடந்த முறை பெற்றோர் - ஆசிரியர்கள் கூட்டத்தில், இவ்விஷயத்தை கூறி, மதிய உணவாக எனது மகளுக்கு முட்டை வழங்க வேண்டாம் என கூறியிருந்தேன்.ஆனால், இப்பள்ளி ஆசிரியர் புட்டசாமி, எனது மகளுக்கு மதிய உணவுடன் முட்டை வழங்கி சாப்பிட கூறியுள்ளார். எனது மகளோ சாப்பிட மாட்டேன் என்று மறுத்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஆசிரியர் முட்டை சாப்பிட கூறுகிறார் என மகள் கூறினாள். அதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை.ஆனால், கடந்த 20ம் தேதி எனது மகள் முட்டை சாப்பிட மாட்டேன் என்று கூறியும், வலுக்கட்டாயமாக அவருக்கு ஆசிரியர் ஊட்டி உள்ளார். அனைத்து ஜாதியினரும் முட்டை சாப்பிடலாம் என்றும் இது தொடர்பாக யாரிடமும் கூறக்கூடாது என்றும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்துபோன என் மகள், வீட்டுக்கு வந்த பின் அமைதியாகவே இருந்தார்.என் மனைவி குழந்தையிடம் பேசியபோது, அனைத்து விஷயத்தையும் கூறியுள்ளார். இது தொடர்பாக, வகுப்பில் உள்ள மற்ற மாணவர்களிடம் கேட்டபோது, நடந்த சம்பவம் உண்மை என கூறினர். எனவே, சம்பந்தபட்ட ஆசிரியர் புட்டசாமி, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளார்.இந்த சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us