தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை துவக்கம்

தனியார் துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை துவக்கம்

தனியார் துவக்கப்பள்ளி மாணவர் சேர்க்கை துவக்கம்


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 07:35 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 07:35 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி:
தனியார் பள்ளிகளில் நர்சரி, கே.ஜி., 1ம் வகுப்பு பொதுப் பிரிவு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. வரும் டிசம்பர் 15ம் தேதி கடை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.மாநிலத்தின் தனியார் பள்ளிகளில் நர்சரி, கே.ஜி., 1ம் வகுப்பு பொதுப்பிரிவு மாணவர் சேர்க்கை நேற்று துவங்கியது. முதல் பட்டியல் ஜனவரி 12ல் வெளியிடப்பட உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 1ம் தேதி இந்த மாணவர் சேர்க்கை துவங்கிய நிலையில், நடப்பாண்டு முன்கூட்டியே துவக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வசதியை தனியார் பள்ளிகள் அறிமுகப்படுத்தியுள்ளன. விண்ணப்பிப்பது தொடர்பாக வீடியோக்களையும் ஆன்லைனில் பதிவேற்றியுள்ளன.வரும் 2024 மார்ச் 31 நிலவரப்படி, நர்சரி வகுப்பில் சேர்வதற்கு 3 ஆண்டுகளும்; கே.ஜி., வகுப்புக்கு 4 ஆண்டுகளும்; ஒன்றாம் வகுப்பு 5 ஆண்டுகளும் பூர்த்தியாகி இருக்க வேண்டுமென வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us