தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை

மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை

மழை நேரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது எப்படி?: கலெக்டர்களுக்கு பறந்த அறிவுரை


UPDATED : நவ 24, 2023 12:00 AM

ADDED : நவ 24, 2023 07:37 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 24, 2023 12:00 AM ADDED : நவ 24, 2023 07:37 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:
மழைகாலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க மாவட்ட கலெக்டர்களுக்கு 7 கட்டுப்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி விதித்துள்ளார்.விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்:
தொடர் கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் தேங்கி நின்றாலோ அல்லது போக்குவரத்து பாதிக்கப்பட்டாலோ மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். மிதமான மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க கூடாது.மழை நிலவரத்தை ஆராய்ந்து 3 மணி நேரத்திற்கு முன்பாகவே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும். முதன்மை கல்வி அலுவலர்கள் மழையின் தீவிரத்தை ஆராய்ந்து, பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு பரிந்துரைக்க வேண்டும்.மழையின் தீவிரத்தை உணர்ந்து அதிகம் பாதிக்க கூடிய குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க வேண்டும். மாவட்டம் முழுவதற்கும் விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும்.கோயில் திருவிழாக்களின் போது அளிக்கப்படும் விடுமுறையை வேறொரு நாளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். மழை காரணமாக அளிக்கப்படும் விடுமுறைகளை சனிக்கிழமைகளில் பள்ளி வைத்து ஈடு செய்ய வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் அனைத்து பாடங்களையும் கற்க முடியும்.மழையால் பாதிக்கப்பட்டு பள்ளிகளில் மழைநீர் தேங்கியிருந்தால், உடனடியாக மழைநீர் வெளியேற்றப்பட்டு போதுமான வசதிகள் செய்து தரப்படும். இவ்வாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us