அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அலைக்கழிப்பு!
அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அலைக்கழிப்பு!
UPDATED : டிச 08, 2023 12:00 AM
ADDED : டிச 08, 2023 05:18 PM
ராமநாதபுரம்:
அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பிறப்பு, இறப்பு ஆகியவற்றை பதிவு செய்வதற்கு தனி அலுவலர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்க வேண்டும்.மேலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறப்பவர்கள், குற்ற வழக்குகளுக்காக பிண அறுவை சோதனைக்கு வருபவர்கள் குறித்த பதிவுகளை பதிவு செய்து இறப்பு சான்றிதழ்வழங்க வேண்டும். பிறப்பு, இறப்பு பதிவு செய்தவர்களுக்கு ஒரு வாரத்திற்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும்.தேவையில்லாமல் சான்றிதழ் கேட்டு வரும் பொதுமக்களிடம் டாக்டரிடம் கையெழுத்து, செவிலியரிடம் கையெழுத்து, பதிவு செய்த பெயரில் தவறுகள் ஏற்பட்டால் அதனை சரிசெய்து தராமல் மாதக்கணக்கில் பொதுமக்களை அலைக்கழிப்பு செய்து வருவதாக புகார் தெரிவிக்கின்றனர்.குறிப்பாக வெளியூர்களிலிருந்து வருபவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் இறப்பு நடந்தால் அந்த சான்றிதழ் பெறுவதற்காக வர வேண்டியுள்ளது.குறிப்பிட்ட நேரத்தில் வழங்காமல் இழுத்தடிப்பு செய்வதால் பாதிக்கப்படுகின்றனர். அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் சான்றிதழ்கள் வழங்க வேண்டும்.
