UPDATED : டிச 15, 2023 12:00 AM
ADDED : டிச 15, 2023 09:52 AM
அ நிறம் | அளவு
கோவை:
மாநகராட்சி வடக்கு மண்டலம், 12வது வார்டுக்கு உட்பட்ட உடையாம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.99.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக எட்டு வகுப்பறைகள் கட்டப்படுகின்றன.அதேபோல், சின்னவேடம்பட்டி, அஞ்சுகம் நகரில் உள்ள மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் தனியார் நிறுவன முழு பங்களிப்புடன் ரூ.47.80 லட்சம் மதிப்பீட்டில் மூன்றுவகுப்பறைகள் கட்டப்படுகின்றன. இப்பணிகளை மேயர் கல்பனா நேற்று துவக்கிவைத்தார். வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
