sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு

/

இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு

இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு

இஸ்ரோ குழுவினர் திருப்பதியில் வழிபாடு


UPDATED : டிச 31, 2023 12:00 AM

ADDED : டிச 31, 2023 04:57 PM

Google News

UPDATED : டிச 31, 2023 12:00 AM ADDED : டிச 31, 2023 04:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பதி:
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி-58 ராக்கெட் நாளை(ஜன.,01) காலை 9:10 மணிக்கு ஏவப்படுகிறது. இதற்கான 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று(டிச.,31) காலை 8:10 மணிக்கு துவங்கியது.இஸ்ரோ எனப்படும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம், பி.எஸ்.எல்.வி., - சி 58 ராக்கெட் உதவியுடன், எக்ஸ்போசாட் செயற்கைக்கோளை நாளை (ஜன., 1) காலை 9:10 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்படுகிறது. 25 மணி நேர கவுண்ட்டவுன் இன்று(டிச.,31) காலை 8:10 மணிக்கு துவங்கியது.செயற்கைக்கோளின் மொத்த எடை, 469 கிலோ. இது, பூமியில் இருந்து, 650 கி.மீ., தொலைவில் புவி சுற்று வட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன எக்ஸ் - ரே கருவிகள், வானியலில் ஏற்படும் துருவ முனைப்பின் அளவு மற்றும் கோணத்தை அளவிடுவது, நியூட்ரான் நட்சத்திரங்கள், செயலில் உள்ள விண்மீன் கருக்கள் உட்பட, 50 ஆதாரங்களை ஆய்வு செய்யும். இதன் ஆயுள்காலம், 5 ஆண்டுகள்.திருப்பதியில் வழிபாடு
பிஎஸ்எல்வி சி 58 விண்கலத்தின் மாதிரியுடன் திருப்பதி கோயிலில் இஸ்ரோ குழுவினர் வழிபாடு நடத்தினர். அவர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us