sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

புத்தகத் திருவிழா: வாசகர்கள் ஆர்வம்

/

புத்தகத் திருவிழா: வாசகர்கள் ஆர்வம்

புத்தகத் திருவிழா: வாசகர்கள் ஆர்வம்

புத்தகத் திருவிழா: வாசகர்கள் ஆர்வம்


UPDATED : பிப் 05, 2024 12:00 AM

ADDED : பிப் 05, 2024 05:36 PM

Google News

UPDATED : பிப் 05, 2024 12:00 AM ADDED : பிப் 05, 2024 05:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்:
விழுப்புரத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் இடம்பெற்றுள்ள, &'தினமலர்&' நாளிதழின் தாமரை பிரதர்ஸ் புத்தக அரங்கு, பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சி திடலில் புத்தகத் திருவிழா கடந்த 2ம் தேதி துவங்கியது. வரும் 11ம் தேதி வரை, தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 9.30 மணி வரை இந்த புத்தகத் திருவிழா நடக்கிறது.மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும் இந்த புத்தகத் திருவிழாவில் 96 புத்தக அரங்குகள், 5 அரசு துறை சார்ந்த அரங்குகள் அமைந்துள்ளன. படைப்பாளிகள் அரங்கு ஒன்றும் இடம் பெற்றுள்ளது.கலை, இலக்கியம், வாழ்க்கை வரலாறு உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்த ஏராளமான நுால்கள் இடம் பெற்றுள்ளன. புத்தகத் திருவிழாவை மாணவர்கள் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான நுால்களை வாங்கிச் செல்கின்றனர்.வாசகர்களை ஈர்க்கும் தாமரை பிரதர்ஸ் அரங்குகண்காட்சியில், 24வது அரங்காக தினமலர் நாளிதழின் தாமரை பிரதர்ஸ் அரங்கம் அமைந்துள்ளது. இந்த அரங்கில், அறிவியல், பொது நிகழ்வுகள், வரலாறு, ஆன்மிகம் மற்றும் அரசியல் தலைவர்களின் வரலாறு உட்பட 100 தலைப்புகளில் புத்தகங்கள் அணிவகுத்துள்ளன.காஞ்சியின் கருணைக்கடல், சங்ககால நாணயவியலின் தந்தை இரா.கிருஷ்ணமூர்த்தி, பார்த்தது, கேட்டது, படித்தது பாகம் 1 முதல் 10 வரை, கிருஷ்ண ஜாலம், ஆன்மிக சிறுகதைகள், காவலர் தேர்வு கையேடு, நலம் நம் கையில், சோழர்கள் இன்று, புலவர் புராணம், தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் உள்ளிட்ட நுால்கள் இடம் பெற்றுள்ளன.இங்கு 10 சதவீதம் தள்ளுபடியில் புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது. தாமரை பிரதர்ஸ் புத்தக அரங்கை, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பலரும் பார்வையிட்டு, தங்களுக்கு தேவையான புத்தகங்களை தள்ளுபடி விலையில் ஆர்வத்தோடு வாங்கிச் செல்கின்றனர்.தாமரை பிரதர்ஸ் அரங்கை, காலை 10.00 முதல் இரவு 8.00 மணி வரை பார்வையிடலாம். மேலும், பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை டோல்பிரீஎண் 1800 425 7700 மூலம் தொடர்பு கொண்டு கேட்டால் வீட்டிற்கு வந்து சேரும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. 






      Dinamalar
      Follow us