பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் சீரமைப்பு பணிகள் துவக்கம்
பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில் சீரமைப்பு பணிகள் துவக்கம்
UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 05:35 PM
புதுச்சேரி:
பாரதிதாசன் மகளிர் கல்லாரியில் தீ விபத்தில் பழுதடைந்த கணினி அறிவியல் மையத்தை, சீரமைக்கும் பணி, ரூ.8.40 லட்சம் மதிப்பில் துவங்கியது.முத்தியால்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில், திடீர் தீ விபத்து ஏற்பட்டு, கணினி அறிவியல் மையம் பழுதடைந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த, பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ., பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து, அந்த மையத்தை உடனடியாக சீர் செய்ய அறிவுறுத்தினார்.இதைத்தொடர்ந்து அவர், ரூ. 8.40 லட்சம் மதிப்பில், மையத்தை சீரமைக்கும் பணியை நேற்று துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் ராஜி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டட பிரிவு செயற்பொறியாளர் சுப்பராயன், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் அனந்த பத்மநாபன், கல்லுாரி பேராசிரியர், மாணவியர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.