UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 05:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி:
மாநிலத்தில் காலியாக உள்ள 4100 வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பதவிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப்பட்டது.தேனியில் நாடார்சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியகுளம் ரோடு பி.சி., கான்வென்ட் பள்ளியில் தேர்வு நடந்தது.இரு மையங்களிலும் 938 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதில் 910 பேர் தேர்வில் பங்கேற்றனர், 28 பேர் ஆப்சென்ட் ஆகினர். தேர்வினை தனியார் பள்ளிகள் இயக்குனர் நாகராஜமுருகன், கலெக்டர் ஷஜீவனா, சி.இ.ஓ., இந்திராணி பார்வையிட்டனர்.